பேராலய பேராயர் தாமஸ் அக்வினாஸிடம் வாழ்த்து பெற்றார் திமுக வேட்பாளர்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவை மணிகுண்டு பகுதியில் உள்ள தூய மைக்கல் பேராலயம் பேராயர் தாமஸ் அக்வினாஸை சந்தித்து  வாழ்த்துக்களை பெற்றார். தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது கோவையில் திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார், அதிமுக வேட்பாளராக சிங்கை இராமச்சந்திரன், பாஜக வேட்பாளராக அண்ணாமலை ஆகியோர் களம் காண்கின்றனர். தற்போது கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டமும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திமுக வேட்பாளரான கணபதி ராஜ்குமார் மணிகுண்டு பகுதியில் உள்ள தூய மைக்கல் பேராலயம் சென்று கோவை மறை மாவட்ட பேராயர் தாமஸ் அக்குவினாஸ் அவர்களை சந்தித்து சால்வை மற்றும் பூக்குத்து வழங்கி ஆதரவு கேறினார் மேலும் அவரிடம் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.இவருடன் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

Loading