எண்டோமெட்ரியோசிஸ் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை.

உலகளவில் சுமார் 10%, பருவ வயதுடைய பெண்களைப் பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் எனும் நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார் கோவை நாடாளுமன்ற பாஜக அண்ணாமலை. கோயம்புத்தூர் ராவ் மருத்துவமனை சார்பில் பெண்களை பாதிக்கும் எண்டோமெட்ரியோசிஸ் எனும் நோய் பாதிப்பு குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. 

மேலும் ரேடியோ மிர்ச்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்த, மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகளை, டாஸ் போட்டு தொடங்கி வைத்தத அண்ணாமலை பாரத பிரதமர்  நரேந்திர மோடி சிந்தனையில் உள்ள, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நிறைவேற்றும் ‘சக்தி’ படைத்த சகோதரிகள் மத்தியில் உரையாற்றினார் .

Loading