நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் கோவை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடியிடும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக ஓசூர் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு, எஸ்டிபி மாவட்ட செயலாளர் ராஜா உசேன் ஆகியோர் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்.
Leave a Reply