தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா. கோவையில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி.

2024 தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை எட்டுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பிலும் கோவை மாநகர் பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று வஉசி விளையாட்டு அரங்கில் “தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா” எனும் தலைப்பில் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. 

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், மகளிர் திட்ட அலுவலர் சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் அருணா உடன் இருந்தார்.

Loading