மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பது குறித்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை எட்டும் வகையில் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையம் இணைந்து நூறு சதவிகித வாக்கு பதிவினை எட்டும் வகையில் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி ஆகிய அனைத்து பகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆட்டோ மற்றும் பேருந்துகளில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.

Loading