கோவை ஆடிஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவுனில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக கோவை பாராளுமன்ற வேட்பாளரான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துக் கொண்டார். அறிமுக கூட்டத்தை தொடர்ந்து பேசிய அண்ணாமலை தமிழ் மாநில காங்கிரஸ் பாஜக கூட்டணியில் உள்ளது. தமிழகத்தின் ஊழலற்ற , நேர்மையான கட்சி என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். ஒரிஜினல் காங்கிரஸ்காரர்கள் என்றால் தமிழ் மாநில காங்கிரஸ் காரர்கள் தான். இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சியினர்கள் கிடையாது.
நாட்டின் பிரதமராக வர வேண்டியவர் மூப்பனார் குடும்ப கட்சியின் சூழ்ச்சி காரணமாக அவரால் வர முடியவில்லை. இதை பிரதமர் சேலத்தில் பங்குபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட பேசி இருப்பார். பிரதமர் மோடி ஜி.கே.வாசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். ஜி.கே.வாசன் அவர்களுக்கும் எனக்கும் நல்ல நட்பு உள்ளது. தமிழகத்தில் வெற்றி கூட்டணி இது. தமிழகத்தில் தனித்து நிற்க வேண்டும் என்பதையும் இந்த கூட்டணியை முதலில் ஆதரித்தவர் ஐயா ஜிகே.வாசன் இந்த கூட்டணியை வழிநடத்துபவரும் கூட அவர்தான் என்று நான் வழிமொழிந்திருக்கிறேன்.
எல்லா கூட்டணிக் கட்சி தலைவர்களையும் அனுசரித்துச் செல்லக்கூடிய குணம் படைத்தவர் ஜி.கே.வாசன். முதன் முதலாக 3 இடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெறுவார்கள், 400 இடங்களில் வெற்றி பெறுவார் பிரதமர் மோடி. இது தேர்தலுக்காக வந்த கூட்டணி இல்லை. நமது நோக்கம் கோவைக்கு வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் தொழில் நகரம் கலாசாரம் கொண்ட கோவை நகரம். அடுத்தகட்ட தலைமுறை நன்றாக வளர வேண்டும் என்றார். இன்னும் 25நாட்கள் அயராது பணி செய்ய வேண்டும். பாஜக தொண்டர்களுக்கு ஒரு ஒரு வேலை கொடுத்தால் நன்றாக பணி செய்யகூடியவர்கள் நீங்கள் அனைவரும் குறைந்த பட்சம் 50 வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க வேண்டும், பிரதமர் மோடியின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டுமென கேட்டுகொண்டார்.
Leave a Reply