தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வினோத் ஆர் ராவ் செலவினப் பார்வையாளர் கீது படோலியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு கோயம்பத்தூர் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் வினோத் ஆர் ராவ் செலவினப் பார்வையாளர் கீது படோலியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி உட்பட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சி வகுப்பில் அனைத்து கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. தேர்தல் செலவுக்கான தனி வங்கிக்கணக்கு பராமரித்தல், பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவினத் தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்கவேண்டும். தேர்தல் செலவு கணக்கு பதிவேடு பராமரித்தல், தினசரி செலவு கணக்கு பராமரிப்பு பகுதி, ரொக்கப்பதிவேடு, வங்கி பதிவேடு, நட்சித்திர பேச்சாளர்கள் செலவினம், சட்டப்படியான தேர்தல் செலவினம், உள்ளிட்டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டு, பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. எந்த அரசியல் கட்சியும் அல்லது வேட்பாளரும் வெவ்வேறு சாதி, இனம், மதம், மொழி ஆகியவற்றுக்கிடையில் வெறுப்பையும் துவேசத்தையும் தூண்டுகிற அல்லது அதிகப்படுத்துகிற செயலில் ஈடுபடக்கூடாது. கோயில்கள், சர்ச்சுகள், மசூதிகள் அல்லது மற்ற வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யகூடாது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களின் நாள் நேரம் ஆகிய விவரங்களை உள்ளூர் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவித்து காவல்துறையின் அனுமதி பெறவேண்டும்.
எல்லா வேட்பாளர்களும் தேர்தல் பணிக்காக பயன்படுத்த உள்ள வாகனங்களின் விபரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் அல்லது அவரின் அதிகாரப்பூர்வ அலுவலர்களுக்கு தேர்தல் பணி துவங்குவதற்கு முன் தெரிவிக்கவேண்டும். வாக்காளர்களாக இல்லாமல் வெளியிலிருந்து அழைத்து வரப்பெற்ற அரசியல் தொண்டர்கள் பணியாளர்கள் பிரச்சாரம் முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தொகுதியிலிருந்து அவர்கள் உடனடியாக வெளியேறி விடவேண்டும். கையூட்டு கொடுத்தல், வாக்காளர்களை மிரட்டுதல்,வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் பிரச்சாரம் செய்தல், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்குள் பொது கூட்டங்கள் நடத்துவது வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றுவருவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்களுடன் ஒத்துழைத்து அமைதியாகவும் நல்லமுறையிலும் தேர்தலை நடத்தி முடிக்கவும் வாக்காளர்களுக்கு எந்த தடையம் இல்லாமல் வாக்களிக்கவும் ஒத்துழைப்பு நல்கவேண்டும். மேலும், இப்பயிற்சிவகுப்பில், பொது மற்றும் தனியார் இடங்களில் விளம்பரம்செய்தல், அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் / முகவர்கள் தங்கள் சொந்த சொத்தில் பேனர்கள் கொடிகள் கட்டி விளம்பரம் செய்தல், வாகனங்களில் விளம்பரம் செய்தல், டிவி சேனல்கள் கேபிள் டிவி, வானொலியில் அரசியல் விளம்பரங்கள் செய்தல், உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கான பொது நடத்தை விதிகள், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை முறையாக பின்பற்ற கேட்டுக்கொள்ளப்பட்டது.
Leave a Reply