ராயல்கேர் மருத்துவமனை சார்பில் இருசக்கரவாகன ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்.

கோவை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைகளால் சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.தமிழகத்தில் சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,இதனை தடுக்கும் விதமாக ராயல் கேர் மருத்துவமனை இரு சக்கர வாகன ஆம்புலன்ஸை அறிமுகம் செய்துள்ளனர்.கோவையில் முதல் முறையாக துவங்கப்பட்டுள்ள இந்த வசதியை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இது குறித்து அவர் கூறுகையில்,வாகனங்களை ஓட்டும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடித்தாலே பெரும்பான்மையான விபத்துகளை தவிர்க்கலாம். மேலும், பெரும்பாலான தலைக்காயங்கள் சாலை விபத்துக்களாலேயே ஏற்படுகிறது.தற்போது துவங்கப்பட்டுள்ள இரு சசக்கர வாகன ஆம்புலன்ஸ், அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகலான பாதைகள் வழியாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைவாக செல்லமுடியும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் பத்து நிமிடங்களுக்குள் அளிக்கப்படும் முதலுதவி சிகிச்சையான பிளாட்டினம் ஹவர் சேவை மிகமுக்கியமானது. 

இதில் தேர்ந்த பயிற்சிபெற்றவர்கள் இந்த இல் சக்கர ஆம்புலன்ஸை இயக்குவதாகவும், அவசரகால சைரன்கள் கொண்ட இருசக்கரவாகன ஆம்புலன்ஸ்களில் முதலுதவி அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் உயிர்காக்கும் உபகரணங்கள் இருப்பதாக கூறிய அவர், மேல்சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றடைய இந்த வாகனங்கள்  உதவும் என்றார்..முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக தலைக்காய தினத்தை முன்னிட்டு ரேஸ்கோர்ஸ் பகுதியில் வாக்கத்தான் நடைபெற்றது. கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கிய தலைக்காய விழிப்புணர்வு நடைபயணம் பிரதானசாலை வழியாக நஞ்சப்பா சாலை ராயல்கேர் மருத்துவமனை சென்றடைந்தது.

Loading