கோவை நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களும்  சின்னங்களும் அறிவிப்பு.

ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு மறுபரிசீலனை செய்யப்பட்டது.  அதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு வாபஸ் பெறப்பட்டதன் அடிப்படையில் 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கட்சி வேட்பாளர்களுக்கான சின்னங்களும் சுயேட்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களும் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு தாமரை, அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்க்கு உதயசூரியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதனுக்கு ஒலிவாங்கி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வேல் முருகனுக்கு யானை, ராஷ்ட்ரிய சமாஜ் பாட்க்ஷா வேட்பாளர் ஆனந்தகுமாருக்கு குளிர்பதன பெட்டி,  இந்திய கணசங்கம் வேட்பாளர் குமார்க்கு வெண்டைக்காய், நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் சங்கீதாவிற்கு ஆட்டோ ரிக்க்ஷா, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேட்பாளர் புஷ்பானந்தத்திற்கு கேஸ் சிலிண்டர், ஹிந்துஸ்தான் ஜனார்தா கட்சி வேட்பாளர் ராகுல் காந்திக்கு ஏழு கதிர்களுடன் கூடிய பேனா முனை, வீரோ கீ வீர் இந்தியன் பார்ட்டி வேட்பாளர் ரிச்சர்ட் வின்சென்ட் க்கு கிரிக்கெட் மட்டை, ஆகிய சின்னங்களும், 

சுயேட்சை வேட்பாளர்களாகிய அண்ணாதுரைக்கு பேட்டரி டார்ச், அருண் காந்துக்கு மணற்கடிகை, கார்த்திக் க்கு அமிழ்சுருள், கிருஷ்ணனுக்கு தென்னந்தோப்பு, கோபாலகிருஷ்ணனுக்கு ஸ்கூல் பேக், சஞ்ஜெய் குமாருக்கு இஞ்சி, சண்முகத்திற்கு கப்பல், சுரேஷுக்கு காலிப்ளவர், சூரிய குமாருக்கு கணினி, தினேஷுக்கு கிணறு, துரைசாமிக்கு வாளி, நூர் முகமதுக்கு தலைக்கவசம், பசுபதிக்கு பெட்டி, பழனிசாமி ராஜ்க்கு ரப்பர் ஸ்டாம்ப், பிரேம் குமாருக்கு மோதிரம், பூபாலனுக்கு தாழ்பாள், முத்துசாமிக்கு கேப்ஸிகம், ரவீந்திரனுக்கு ஷூ, ராமச்சந்திரன் M க்கு மின்கம்பம் ராமச்சந்திரன் R க்கு கேரம் போர்டு, ராஜமாணிக்கத்திற்கு செங்கல், ராஜ்குமார் G க்கு மடிகணினி, ராஜ்குமார் G.B க்கு கேக், ராஜ்குமார் M க்கு திராட்சை, ராஜ்குமார் க்கு வைரம், ஜாகிர் ஹுசைன்க்கு பலாப்பழம் ஆகிய சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Loading