நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மைம் ஷோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கல்லூரி மாணவிகள் பங்கேற்று வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகளுடன் மைம் நிகழ்ச்சி நடத்தி காட்டினர். இந்நிகழ்வில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ சுரபி மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமரன் மேற்பார்வையாளர்கள் நிர்மலா சிவசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
Leave a Reply