நாடாளுமன்ற பொது தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசு சார்பில் பல்வேறு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தொடர்பான புகார்கள் இருந்தால் அதனை தெரிவிக்க மாநில தேர்தல் செலவின பார்வையாளரின் தொடர்பு எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு தமிழ்நாட்டிற்கான தேர்தல் செலவின பார்வையாளராக பி.ஆர்.பாலகிருஷ்ணன் நியமிக்கபட்டுள்ளதாகவும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் பாராளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் மாநில தேர்தல் செலவின பார்வையாளரை அலைபேசி எண்:9345298218 என்ற எண்ணின் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply