100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். 

இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணியானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தாமஸ் பார்க் சென்றடைந்ததுமுன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்து வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Loading