சந்தேகத்திற்குரிய பண பரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம்.

பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு சந்தேகத்திற்குரிய பணபரிவர்த்தனைகள் குறித்து வங்கியாளர்கள் மற்றும் புலனாய்வு பிரிவு, மத்திய மாநில கலால் பிரிவு, வருமானவரித்துறை உள்ளிட்ட அமலாக்கத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோயம்புத்தூர் செலவின பார்வையாளர்களான கீது படோலியாய், உம்மே ஃபர்டினா அடில் மற்றும் பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான ஆஷிஷ் குமார், சௌரப் குமார் ராய், நீலகிரி செலவின பார்வையாளரான சந்தீப் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில் ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர்(தேர்தல்) தணிகைவேல் மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல், மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட டெபாசிட், பணம் எடுத்தல், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பலரின் கணக்குகளுக்கு RTGS மூலம் வழக்கத்திற்கு மாறான பணப் பரிமாற்றம் செய்யபட்டுள்ளது குறித்தும் கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வேட்பாளர்கள் மனைவி, அவரைச் சார்ந்தவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம், ரொக்கம் பணம் எடுத்தல் மற்றும் ரொக்கமாக வைப்பு, வாக்காளர்களுக்கு கொடுக்க பயன்படுத்தப்படும் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகள் மூலம் அந்த பணம்வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் இருந்தால் வங்கிகள் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள பறக்கும் படைக்கு தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கபட்டது.

Loading