கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தனிப்படை காவல்துறையினர் கற்பகம் கல்லூரி சந்திப்பு அருகே வாகன சோதனை மேற்கொண்ட போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத் (59) மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி (49) ஆகியோர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூபாய் 1,10,000/- மதிப்புள்ள 11 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார் அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
Leave a Reply