கோவை வனச்சரக எல்லையில் சில நபர்கள் நான்கு சக்கர வாகனத்தில் (eritiga and Bolero) சட்ட விரோதமாக யானை தந்தம் விற்பனை செய்ய போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் ஆனைமலை புலிகள் காப்பகம் வழிகாட்டுதல் படியும் கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி கோவை மற்றும் மதுக்கரை என இரு குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்து விசாரித்ததில் சட்ட விரோதமாக யானை தந்தம் விற்பனை செய்ய முற்பட்டது தெரிய வந்தது. மேலும் நடத்திய விசாரணையில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த சர்வேஷ் பாபு, கூடலூரைச் சேர்ந்த சங்கீதா, இடையர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ், வெள்ளலூரைச் சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன் பாளையத்தை சேர்ந்த
அருள் அரோக்கியம் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்து குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 5 ல் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தனி குழு அமைக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
Leave a Reply