தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் படி ஜூன் 2024 மாதத்திற்கான பயிற்சி, 05.06.2024 புதன்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர், பயிற்சி நாளன்று, பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடையாக செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
தொலைபேசி: 0422-6611336, 0422-6611226 எண்ணிலும்
pathology@tnau.ac.in மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நடு வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply