பாஜகவின் கோவை பாராளுமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் கோவை அவினாசி சாலை நீலாம்பூர் பகுதியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சியின் செயலாக்கத்தை ஆய்வு செய்து வருவதாகவும், கோவையில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களை சந்திக்க உள்ளதாகவும், நான் வேட்பாளராக இந்த கூட்டத்தில் பங்கேற்றதாக கூறினார். கோவையில் 6 சட்டமன்ற தொகுதியில் அனைத்து பொறுப்பாளர்களும் சந்தித்துள்ளதாகவும், அடுத்த தேர்தலுக்கு தயாராவது, நடந்து முடிந்த தேர்தலில் பெற்ற நல்ல விஷயங்களை, தோல்வி கண்ட காரணத்தை ஆராய்ந்து அடுத்து வரும் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் தனி அதிகாரம் படைத்த சி.ஏ.ஜி. தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தை மேற்பார்வை செய்துள்ளதாகவும், டாஸ்மாக்கிற்கு வரக்கூடிய வருமானம் வெளிப்படையாக இல்லை என அறிக்கை வழங்கியுள்ளதாக கூறியவர், நான் உட்பட சாதாரண தமிழக மக்கள் டாஸ்மாக்கின் ஆண்டு அறிக்கை எடுக்கப்பதே மிகவும் சிரமம் என்பதால் சி.ஏ.ஜி., அறிக்கை ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றார். டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை என அமைச்சர் துரைமுருகன் சொன்னது சில பேர் நகைச்சுவையாக சொன்னாலும், நாங்கள் கள்ளக்குறிச்சி சென்றபோது சிலர் அதை சொன்னதாகவும், தண்ணீர் போல் தான் இருப்பதாக சொன்னார்கள் என்றும், டாஸ்மாக் போதை அதிகமாக வேண்டும் என்பதால் கள்ளச்சாராயம், போதைப்பொருள் நோக்கி செல்வதாக சொன்னதாகவும் குறிப்பிட்டார். திமுகவை சார்ந்த எந்த புள்ளி டாஸ்மாக் மது உற்பத்தி செய்கிறார்கள், அதன் தரம் ஆய்வுக்கு உட்படுத்த படுகிறதா? என்பது தொடர்பாக சட்டமன்றத்தில் பேச வேண்டும் என்றார். ஈஷாவை பொறுத்தவரை, யானை வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து வனத்துறை அமைச்சர் 3 ஆண்டுகள் ஆகியும் கண்டு பிடிக்கவில்லை என சொல்லும்போது, அமைச்சர் துரைமுருகன் 3 ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என கேட்பதாகவும், ஈஷா தாங்கள் விதிமீறல் இல்லை என ஆதாரமாக சொல்லிவிட்ட நிலையில், ஏதாவது பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காகவே ஈஷாவை வைத்துள்ளதாகவும், கடந்த சில நாட்கள் திமுக அமைச்சர் கிடையே இருக்கும் பிரச்சனையை சட்டமன்றத்தில் பார்க்க முடிவதாக கூறியவர், சென்னையில் அடிப்படை சுகாதாரம் அகலப்பாதாளத்தில் உள்ளதாகவும், குப்பைகள் கையாள்வதில் முறையாக இல்லாததே இதுபோன்று கழிவுநீர் கலப்பு காரணம் என்றும், இதைப்பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் பேசுவதில்லை என்றும் குற்றச்சாட்டினார். தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் தமிழக அரசால் இன்னும் கொடுக்கவில்லை என்றும், கள்ளக்குறிச்சியில் ஓடிப்போய் 10 லட்சம் ரூபாய் கொடுக்கும் போது மக்களுக்காக போராடும் காவல்துறைக்கு கொடுக்க வேண்டிய ஊதியத்தை கொடுக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது என்றும், இதுபற்றி காவல்துறை தொடர்பான சட்டமன்றத்தில் முதல்வர் பேசாதது வருத்தமளிப்பாதாக தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் தவறில்லை என்றும், ஆனால் துபாய், ஜப்பான் சிங்கப்பூர், போன்ற வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக வெள்ளை அறிக்கை கொடுக்காமல் இருப்பது தான் கேள்வியை எழுப்புவதாகவும், அரசு அதிகாரிகளை அழைத்துக்கொண்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் செல்லும் முதலமைச்சர் பயணத்தால் மேற்கொண்ட லாபம் என்னவென்று கேட்டால், ஜீரோ, மக்களுக்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்றவர், கல்வி பாடத்திட்டங்கள் தரமின்மையால் தமிழகத்தில் திறன் மிக்க இளைஞர்கள் குறைந்து வருவதாகவும், தமிழகத்தின் திறன் குறைந்து வருவதால் பிற மாநிலங்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைவதன் மூலம் அறியலாம் என குஜராத் மாநிலத்தை எடுத்துக்காட்டி சுட்டிக்காட்டினார்.
தென்ன மரம், பணை மரம் உள்ளிட்டவைகளிலிருந்து ஆண்டாண்டு காலமாக கள்ளுக்கடை இருந்ததாகவும், அதை கொண்டு வர சொல்வதாகா கூறியவர், படிப்படையாக டாஸ்மாக் குறைக்க வேண்டும் என்றும், டாஸ்மாக்கை அரசு நடத்தாமல் தனியாரிடம் நடத்த கேட்பதாகவும், குஜராத், கேரளா மாநிலங்கள் போன்று மது விற்பனை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு, சாராய விற்பனையில் திமுகவை சேர்ந்தவர்கள் உள்ளதாகவும் குற்றச்சாட்டினார். விஜய் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர் , திமுகவிற்கு சேவை செய்யும் அடிமையான கட்சி என்றால் காங்கிரஸ் என்பது அதன் அகில இந்திய தலைமை அறிக்கை சொல்வதாகவும், 4 கட்சி மாறி 5 கட்சியில் உள்ள செல்வ பெருந்தகை, நாட்டின் அவசரநிலை பிரகடனம் உள்ளிட்ட எதை பற்றியும் படிக்காதாதால் அவருடைய அறிவு இவ்வளவு தான் என்று செல்வ பெருந்தைகையை சாடியவர், தமிழகத்தில் தலைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது, பின் ஏன் கீழ் செல்கிறோம்? குடிகார மாநிலமாக மாற்றி வைத்துள்ளனர், அனைத்து இடங்களிலும் தலைவர்கள் உள்ளனர், குறைவாக உள்ளனர், இன்னும் தலைவர்கள் வேண்டும் என்பது தான் விஜய் கருத்தாக இருக்க முடியும் என்றார். இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிந்துரையில் ஒப்பந்தம் பெற்ற நிறுவனம் என்பதால், முதல்வர் ஸ்டாலின் எந்த நிறுவனம் என்பதை கண்டறிந்து கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றவர், சென்னையில் லிப்ட் விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவத்தில் எந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதோ அந்த நிறுவனம் கட்டியது தான் அந்த லிப்ட் என்பதை சுட்டிக்காட்டியவர், சென்னை ஜி.எஸ்.டி., சாலையில் கடைகள் அகற்றம் தொடர்பான கேள்விக்கு – கடை கட்டும் போது அதிகாரிகள் எங்கு சென்றார்கள்? ஒருபுறம் அனுமதி வழங்குகிறார்கள்? மறுபுறம் இடிக்கிறார்கள் ? எந்த நாட்களில் நீதிமன்றம் செல்ல முடியாதோ சனிக்கிழமை, ஞாயிற்று கிழமைகளில் இதுபோன்று ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாகவும், ஆக்கிமிப்பில் கட்டும் போது வேடிக்கை பார்த்து விட்டு இடிப்பது மனிதாபிமானம் அடிப்படையில் சரியில்லை என்றார். நீட் பொறுத்தவரை அடித்தட்டு மக்களுக்கு மருத்துவக்கல்லூரிக்கு செல்கின்றனர், நீட் தேர்வு நிச்சயமாக தேவை கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் 59 சதவீதத்திற்கும் மேல் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்,
தமிழக அரசு நீட் தொடர்பாக ஏன் வெள்ளை அறிக்கை கொடுக்க மறுக்கின்றனர்? உச்ச நீதிமன்றம் செல்ல மறுப்பது ஏன்? தரவுகள் கொடுக்க வேண்டும் என்பதற்காக உச்ச நீதிமன்றம் கதவை தட்ட மறுப்பதாக கூறியவர், சட்டமன்றத்தில் நிறைவேற்றியது போன்ற பல காகிதங்கள் உள்ளதாகவும், ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நாடகம் நடத்தி வருவதாக சாடினார். சட்டம் உள்ளதால் மேகதாதுவில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது என்றும், தொடர்ந்து இந்த விவகாரம் அரசியலாக்க படுவதாகவும், என்னை போல் காங்கிரஸ் கட்சியினர் கட்ட முடியாது என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பியவர், தமிழக காங்கிரஸ் எம்.எல்., க்கள், மூத்த தலைவர்கள், எம். பி., க்கள் சீத்தாராமையா நேரடியாக சென்று ஏன் சந்திப்பதில்லை? என்றும் வினவினார். தேர்தல் நேரத்தில் கோவையில் கொடுத்திருக்கக்கூடிய முக்கிய வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்றும், கோவை ரயில் நிலையம் விரைவில் அடுத்த கட்டத்திற்கு போகும் இது தேர்தல் வாக்குறுதியில் ஒரு வாக்குறுதி அது அடுத்த பட்ஜெட்டில் பார்க்கப் போகிறீர்கள் என்றவர், இன்னும் ஐந்து பட்ஜெட் இருக்கிறது ஒவ்வொரு அமைச்சராக சந்தித்து பேசி வருகிறோம் எனவே கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகள் குறித்து பேசி வருகிறோம் முதல் பட்ஜெட்டில் சில வாக்குறுதிகள் அறிவிக்கப்பட கூடும் என்றார்.
Leave a Reply