யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கபடும்  – அமைச்சர் முத்துச்சாமி

கடந்த மாதம் 28 ஆம் தேதி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த விராலியூர் பகுதியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை தாக்கி காயம்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்த வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி தமிழக அரசின் நிவாரண உதவி நிதியினை வழங்கினார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து ரு.59000 நிவாரண நிதியினை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி யானை வழித்ததடங்களில் சென்ற நபர்கள் காட்டுயானையால் தாக்கபடுகின்றனர். காட்டு யானையால் தாக்கபட்டு சிகிச்சை பெற்று வரும் பாஸ்கரை சந்தித்து இன்று மருத்துவ உதவிக்காக ரு.59000 கொடுக்கபட்டுள்ளது மேலும் இருவருக்கு அரசின் இந்த உதவி கொடுக்கபடும் இறந்தவர் குடும்பத்திற்கு 10லட்ச ரூபாய் கொடுக்கபடும் முதல்வரின் உத்தரவின் பேரில் நேரில் சென்று கொடுக்கபடும் என்றார்.

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் யானைகள் எல்லை தாண்டி வருவது குறித்து தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாகவும், யானைகள் எல்லை தாண்டி வருவதை தடுக்கவும், பாதுகாக்கவும் துறை அமைச்சருடன் பேசி நடவடிக்கை எடுக்கபடும் என்றார். மற்ற மாநிலங்களில் உள்ளது போன்ற யானை தடுத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அது தொடர்பாக கோவை ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தபட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கபடுமென்றார்.

Loading