திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்ரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் இவருடைய வீட்டின் அருகே உள்ள நிலத்தில் திடீரென மலைப்பாம்பு சென்றுள்ளது.
இதனை அறிந்த இராமச்சந்திரன் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி 12 அடி நீளம் உள்ள மலை பாம்பை உயிருடன் பத்திரமாக மீட்டனர். மேலும் மீட்கப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply