கோதவாடி குளத்திற்கு நீர் வேண்டி குளத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

கோவை தெற்கு  மற்றும் பொள்ளாச்சி வடக்கு பகுதிக்கு இடையே அமைந்துள்ள பிரதான நீராதாரம் கோதவாடி குளம். 27 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021 ஆம் ஆண்டு கோதவாடி குளம் அமைப்பின் தன்னார்வலர்கள் முயற்சியால் குளம் மற்றும் அதன் பல்வேறு நீர்வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டதன் பலனாகவும்,  அரசு பாராளுமன்ற உறுப்பினர்  ஒத்துழைப்பில் பரம்பிக்குளம் ஆழியாறு அணையில் இருந்து உபரி நீர் கோதவாடி குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் பயனாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு உட்பட சீமைகருவேல மரங்கள் அகற்றல் குளத்தைச்சுற்றி அறிவிப்பு பலகைகள் வைத்தல் உட்பட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு கோதவாடி குளத்திற்கு நீர் வேண்டி அமைப்பு மூலமாக கடந்த  2 ம் ஆண்டுகளாக தீபம் ஏற்றம் நிகழ்வு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல இந்த வருடமும் 3 வது ஆண்டாக தீபம் ஏற்றபட்டது. 

இதில் பல தன்னார்வலர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக நெகிழ்ச்சியுடன் இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் குழந்தைகள் மற்றும் தொடர்ந்து  கோதவாடி குளத்திற்காக கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் ஒருங்கிணைப்பாளர்கள் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். 

Loading