கர்ப்ப இழப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த தொடர் மருத்துவ கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

வுமன் சென்டர் பை மதர்ஹுட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சார்பில் கர்ப்ப இழப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த தொடர் மருத்துவ கருத்தரங்கம் கோவை பிஎஸ்சி இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மற்றும் ரிசர்ச் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.  குறிப்பாக இக்கருத்தரங்கில் உலக புகழ்பெற்ற நிபுணர்கள்,  ஆஸ்திரேலியா, நியுசவுத்வேல்ஸில் உள்ள நியுகேஸ்டல் பல்கலைகழகத்தின் எமிரேட்டஸ் விருது பெற்ற பேராசிரியர் ராபர்ட் ஜான் எய்ட்கன், டென்மார்க் கோப்ன்ஹேகன் பல்கலைகழக மருத்துவ துறை தலைவரும், பெண்கள் மகப்பேறு மருத்துவ பேராசிரியருமான ஹென்றிட் ஸ்வார்ரர் நில்சன் காணொளி வாயிலாக உரையாற்றினர். 

இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட ஐ.வி.எப் பெண்கள் மருத்துவர் ரம்யாஜெயராம் கர்ப்ப இழப்பு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கர்ப்ப இழப்பு என்பது ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிவது முக்கியம் என்றார். தற்போது பல பெண்களுக்கு கர்ப்ப இழப்பு என்பது ஏற்படுகிறது இதனை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவித்தவர், மரபணு பிரச்சனை, பெண்களின் வயது முதிர்வு  காரணமாகவும், ஆண்களுக்கு இருக்கின்ற உடல் பருமன், மன அழுத்தம், உணவு பழக்க வழக்கங்கள், மது, புகையிலை, புகை பிடித்தல் போன்ற பழக்கங்களால் கரு  பலவீனமடைந்து கர்ப்ப இழப்பு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார். 

தற்போதுள்ள கர்ப்ப இழப்பு பாதிப்பிற்கு பெண், ஆண் என இருவருக்கும் இருக்கும் உள்ள உடல் மற்றும் மனரீதியிலான பிரச்சனைகளை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய மகப்பேறு மற்றும் தொடர் கரு இழப்பு சிகிச்சை சிறப்பு மருத்துவர் செல்வநந்தினி,  15% சதவீத பெண்களுக்கு கர்ப்ப இழப்பு ஒரு முறை ஏற்படுகிறது என்றும் 2% பெண்களுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கர்ப்ப இழப்பு என்பது ஏற்படுவதாகவும் தெரிவித்தார். 

இது போன்ற பாதிப்பு இருக்கும் பெண்களுக்கு மன அழுத்தம் என்பது ஏற்படும் எனவே அவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டுமென தெரிவித்தார். இதில் வுமன் சென்டர் ஆப் மதர்ஹுட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் விருதுபாஷினி கோவிந்தராஜன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மனோன்மணி உள்பட மருத்துவர்கள் மருத்துவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Loading