இரவு நேரங்களில் தெருக்கள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் சுற்றி வரும் நாய்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இது போன்ற விபத்துக்களால் கை, கால் முறிவு ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கான காரணமாக இரவு நேரங்களில் சாலையில் சுற்றி வரும் நாய்கள் வாகன ஓட்டிகளின் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதால் இந்த விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. எனவே இது போன்ற விபத்துக்களை தவிர்க்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சமுக ஆர்வலர் ரவிச்சந்திரன் இரவு நேரங்களில் சுற்றும் நாய்களால் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் நாய்களின் கழுத்தில் இரவில் மிளிரும் அணியும் அணிந்து வருகிறார்.
இது குறித்து ரவீந்திரன் கூறியதாவது இரவு நேரங்களில் டூ வீலர் போன்றவற்றில் செல்பவர்கள் தெருவில் சுற்றும் நாய்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை இருக்கிறது. இது தவிர பல்வேறு இன்னல்களுக்கு வாகன ஓட்டிகள் ஆளாகின்றனர். இதனால் இரவில் மிளிரும் பெல்ட் நாய்களுக்கு அணிவிக்க முடிவு செய்தேன். இதன்படி தற்போது 300 ஒளிரும் பெல்ட் வாங்கியுள்ளேன். இதனை சரவணம்பட்டி, கணபதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றி தெரியும் நாய்களின் கழுத்துகளில் கடந்த ஒரு வாரமாக அறிவித்து வருகிறேன். தற்போது வரை 160 நாய்களுக்கு ஒளிரும் பெல்ட் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் எனது மகன் மற்றும் எனது நண்பர்கள் எனது சுமார் எட்டு பேர் ஈடுபட்டு உள்ளோம் என்றார்.ஆயிரம் நாய்களுக்கு இது போன்ற பெல்ட் அணிவிப்பது என்ற இலக்கை இலக்குடன் செயல்பட்டு வருகிறோம் நாய்களுக்கு பெல்ட் அறிவிப்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து வருகிறோம் என்றவர், இந்த இரவில் மிளிரும் பெல்ட் காரணமாக வாகன ஓட்டிகள் நாய்களை எளிதில் கண்டறிய முடியும் விபத்துக்கள் குறையும், இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கபடும் என்றார்.
இந்த பெல்ட் விலை ரூபாய் 30 தான் தெருநாய்களை துன்புறுத்தாமல் அதற்கு இது போன்ற பெல்ட் அணிவிக்கலாம். தெருக்களில் நாய்கள் இருப்பது பாதுகாப்பான ஒன்று தான் ஆனால் கருத்தடை செய்வதற்கு ஒரு பகுதியில் இருந்து பிடித்து கொண்டு செல்லும் நாய்களை மீண்டும் அதே பகுதியில் விடாமல் வேறு ஒரு இடத்தில் விடுவித்து விடுகின்றனர். இதனால் அந்த நாய் புதிய இடத்தில் உள்ள நபர்களை தனது பாதுகாப்பிற்காக தாக்குகிறது எனவே நாய்களை கருத்தடை செய்த பிறகு அதனை பழைய இடத்தில் விடுவிக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை எனவும் தெரிவித்தார்.
Leave a Reply