ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் நடைபெற்று வருகிறது.
அதன்படி கோவை ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் வாக்குப்பதிவின் பொழுது எந்தெந்த இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும், அதில் ஏற்படும் பிழைகளை எவ்வாறு சரி செய்ய வேண்டும், உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதனை கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு அறையையும் ஆய்வு செய்தார்.
Leave a Reply