கோவை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் கோவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிங்கை ராமச்சந்திரன், கோவை மாவட்டத்திற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு திட்டங்களை கொடுத்திருப்பதாகவும், திமுக ஆட்சியில் எந்த திட்டமும் வரவில்லை எனவும், கோவையின் குரல் மக்களவையில் ஒலிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
வரும் 2030 ஆம் ஆண்டில் கோவைக்கு எண்ண வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டம் தன்னிடம் உள்ளதாகவும், பாஜக அரசு கொண்டுவந்த ஜிஎஸ்டி யால் தொழில்துறை நலிவடைந்துள்ளதாகவும். திமுக அரசின் மின் கட்டண உயர்வால் சிறுகுறி தொழில்கள் பாதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிரதமர் மோடி கோவைக்கென்று எதையும் செய்யவில்லை என்றவர், கோவையின் தற்போதைய வளர்ச்சிக்கு அதிமுக தான் காரணம் என்றார்.
மேலும் என்னை தேர்ந்தெடுத்தால் இது போன்ற வளர்ச்சி இருக்கும் என்றவர், கோவையின் குளுகுளு காலநிலையை பார்க்கும் வெளியூர் காரர்கள் பணியாற்ற வருபவர்கள் இங்கேயே தங்கி விடுவார்கள் ஆனால் கரூர் காரருக்கும் சென்னைக்காரருக்கும் இந்த காலநிலை பற்றி எல்லாம் தெரியாது என்றார்.
Leave a Reply