உலகளவிலான ராம்ப் வாக்கில் போட்டி தாய்லாந்தில் நாட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறுவர்,சிறுமிகள் பங்கேற்றனர்.
உலக அளவிலான நடைபெற்ற இந்த “JUNIOR MODEL FASHION SHOW” ராம்ப் வாக் நிகழ்வில் இந்திய அளவில் முதல் இடம் பிடித்த 7-வயது சிறுவன் முகமது நிஷார் கோவை திரும்பினார்.கோவை ரயில் நிலையத்தில் சிறுவன் முகமது நிஷாருக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிறுவன் தாயார்,
முகமது நிசாருக்கு மாடலிங் துறையில் அதிகளவில் விருப்பம் இருந்ததனால் 2 ஆண்டுகளாக பயிற்சி அளித்ததாகவும், இதற்காக தனது மகனை சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு அனுப்பியதாக கூறினார். மேலும் இந்தியா அளவில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றுள்ளார் எனவும் ‘Title Winner Award’ வெற்றி வெற்று இந்தியா பெருமை சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
ஏற்கனவே தேசிய அளவிலான ராம்ப் வாக் போட்டியில் இந்தியா அளவில் இரண்டாம் பரிசு பெற்றவர் தற்போது உலகளவிலான போட்டியில் பங்கேற்று இந்தியா அளவில் முதலிடம் பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply