தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஐஎஸ்டிஓ (ISDO) எனப்படும் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பானது 3 வருடங்களுக்கு ஒரு முறை சமூகப்பணியில் ஈடுபட்டு வருபவர்களை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்கான ISDO விருதுகள் வழங்கும் விழா கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 15 சமூகப் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதில் கோவையை சேர்ந்த இலவச நீத்தார் சேவை செய்து வரும் தாய்மை அறக்கட்டளை, ஆதரவற்றவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வரும் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை, கல்வி பணியில் சிறந்து செயலாற்றி வருபவர்கள் என ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சர்வதேச சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவர் லாசர் ராஜன், இந்திய பொறுப்பாளர் மகாராஜன், நிகழ்ச்சி பங்களிப்பு நிறுவனமான ஆர்த்திடா பவுண்டேஷன் உரிமையாளர் நீனா ஆர்த்திடா மற்றும் பிரண்ட்ஸ் ஆப் வைல்ட் லைஃப் நிறுவனர் ரென்னிஸ், காங்கோ பவுண்டேஷன் நிறுவனர் செந்தில் , டெப் லீடர்ஸ் பவுண்டேஷன் நிறுவனர் முரளி மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விருதுகளை பெற்ற சாதனையாளர்கள் கூறும்போது சமூகத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு கை செய்யும் உதவி மறு கைக்கு தெரியாமல் பல்வேரு நலப்பணிகளை செய்து வந்த தங்களை இனம் கண்டு விருது வழஙகி கெளரவித்தது மிகுந்த மகிழ்ச்சியையும், மேலும் சிறப்பான சமுக சேவையை செய்ய வேண்டுமென்ற ஊக்கத்தை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
Leave a Reply