கோவை பேரூராதினம் மருதாசல அடிகளாரை சந்தித்து கோவை பாராளுமன்ற வேட்பாளர் அண்ணாமலை ஆசிர்வாதம் பெற்றார். பேரூர் பகுதியிலுள்ள பேரூராதினம் மருதாச்சல அடிகளாரை சந்தித்து ஆசிர்வாதம் பெறுவதற்காக கோவை பாராளுமன்ற வேட்பாளரும் பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை இன்று காலை பேரூர் ஆதீன மடத்திற்கு வந்தார் இதையடுத்து அண்ணாமலைக்கு பேரூர் ஆதீனத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதீன பீடத்தில் அமர்ந்திருந்த பேரூர் ஆதீனம் மருதாசில அடிகளார் சிவபதிகம் பாடி அண்ணாமலைக்கு பொன்னாடை அணிவித்தும், மலர் கிரீடம் அணிவித்தும், நெற்றியில் திருநீர் பூசி ஆசீர்வாதம் வழங்கினார்.
ஆன்மீகபக்தியுடன் அண்ணாமலை பேரூர் ஆதீனத்தை குனிந்து வணங்கி தரிசனம் செய்து திருச்சிற்றம்பலம் மேடையில் அமர்ந்துள்ள நடராஜனை வணங்கி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அண்ணாமலை கோவையில் கடந்து மூன்று நாட்களுக்கு மேலாக தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாக இருக்கின்றனர். இது குறித்து தமிழக அரசு மெத்தனப் போக்கு காட்டாமலும் தேர்தலை காரணம் காட்டாமலும் உடனடியாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளில் தண்ணீரை பயன்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மேலும் அரசியல் தாண்டி சிறுவாணி தண்ணீரை பெறுவதற்கு கேரளா அரசு உடன் பேச்சு வார்த்தை நடத்த திமுக அரசு முயற்சிக்க வேண்டும். மேலும் குளங்களுக்கு நீர் வரும் பாதைக்கு மத்திய அரசு பலகோடி நிதிகளை ஒதுக்கினாலும் தமிழக அரசு சரியான முறையில் கையாளுவது இல்லை. ஒரு லட்சம் குளங்களை குஜராத் மாநிலங்களில் மக்கள் பங்களிப்புடன் முதலமைச்சராக இருந்தபோது மோடி பராமரிப்பு செய்து காட்டினார். நமது தமிழகத்தில் அதே போன்ற தண்ணீர் பிரச்சனை வரக்கூடாது என்ற எண்ணம் மோடிக்கு உள்ளது. ஆனால் ஆளுகின்ற தமிழக அரசு முறையாக திட்டங்களை செயல்படுத்துவதில்லை அதே போல நேரடியாக குடிதண்ணீர் கிடைக்கும் வகையில் ஜல் சக்தி திட்டம் உருவாக்கப்பட்டது.
ஆனால் தமிழகத்தில் அத்திட்டம் முழுமையாக முடக்கப்பட்டு அதில் அதிகமான முறைகேடு நடைபெற்று உள்ளது. இதனால் மத்திய அரசு வழங்கப்படுகின்ற நிதி வீணடிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தவர், ஆன்மீகத்துக்கும் அரசியலுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு ஆன்மீகம் எப்படி அறம் சார்ந்து இருக்க வேண்டுமோ அதைப்போல் அரசியலும் அறம் சார்ந்திருக்க வேண்டும் ஆன்மீகத்துக்கும் அரசியலுக்குமான தொடர்பு குறைந்து கொண்டே இருக்கிறது. அரசியல்வாதிகள் ஒரு கோவிலுக்கு செல்கிறோம் சாமி கும்பிடுகிறோம் என்பது போல் தங்களை ஆன்மீகவாதி என்பதை போல் காட்ட முயற்சிக்கிறார்கள். மதகுருமார்கள் ஆதீனங்களை பார்த்து அப்போது அவர்களது அறிவுரைகளை பெற்று அதன் மூலமாக நம்மை செம்மைப்படுத்திக் கொண்டு நேர்வழிப்பாதையில் ஆன்மீகம் செய்வதுதான் அரசியல்வாதி. அரசியலுக்கு வரும் பொழுது அறநெறியை பின்பற்ற வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். இதனையடுத்து சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகளை சந்தித்து ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துக்களை பெற்றார் வேட்பாளர் அண்ணாமலை.
Leave a Reply