கோவை காளப்பட்டி பகுதியில் இந்து முன்னணி சார்பில் 100% வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பாஜக மாநில தலைவரும் கோவை பாராளுமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான அண்ணாமலை சிறப்பு உரையாற்றினார். கட்சியினர் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்தாலும் இந்து முன்னணியினர் ரத்தத்தை சிந்தி அமைப்பை வளர்த்ததாகவும் தீவிரவாதம் தலை தூக்காத வகையில் கோவையில் தேசிய பாதுகாப்பு முகமையான (NIA) அலுவலகத்தை நிச்சயமாக கொண்டு வருவேன் என உறுதி அளித்தார்.
பின்னர் கூட்டத்தை முடித்து வெளியே வந்த அண்ணாமலை இடம் வேட்பு மனு குளறுபடி குறித்த எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் போல் டிராமா வேற்று வழியில் கொண்டு வந்துள்ளார்கள் என்றார். மேலும் இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 என வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது எனவும் வேட்பு மனுக்கள் தயார் செய்யும் பொழுது வழக்கறிஞர்களிடையே குழப்பம் இருந்ததால் நாங்களே இரண்டையும் தயார் செய்தோம் எனவும் இது ஒரு பெரிய விஷயம் அல்ல என்றும் விளக்கமளித்தார்.
எதிர்க்கட்சிகள் களத்தில் எதிர்க்க முடியாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கிறார்கள் எனவும் இது அவர்கள் தோல்வி பயத்தை காட்டுகிறது எனவும் சுட்டிக்காட்டினார். உச்சபட்சமாக நிராகரிக்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் இந்த வேட்புமனு தேர்தல் அதிகாரியால் ஏற்கப்பட்டுள்ளது எனவும் சீரியல் நம்பர் 15 மற்றும் சீரியல் நம்பர் 27 இரண்டும் நாம் எப்போது தாக்கல் செய்தோமோ சேப்டிக்கு ஸ்பேர் காப்பி தாக்கல் செய்வோம் எனவும் மேலும் விளக்கம் வேண்ட என்றால் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நீங்கள் கேள்வி கேட்கலாம் எனவும் வேண்டுமென்றே பொய்யான செய்தியை சொல்லி உள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.
Leave a Reply