சித்தாபுதூர் ஐய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அண்ணாமலை.

கோவை நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நாடாளுமன்ற தேர்தலில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் திமுக , அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டா போட்டியிட்டு வரும் நிலையில் கோவை தொகுதியை கைபற்ற பாஜக தலைமை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையே வேட்பாளராக நிருத்தியுள்ளது. 

இன்னிலையில் கோவைக்கு வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை சித்தாபுதூர் பகுதியிலுள்ள இரண்டாம் சபரிமலை என்று அழைக்கப்படும், புகழ்பெற்ற சித்தாப்புதூர் ஐயப்பசுவாமி திருக்கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபட்டு செய்தார். ஶ்ரீசக்கரத்தின் மீது, தவக்கோலத்தில் அழகுற அமர்ந்திருக்கும் ஐயப்ப சுவாமி, அனைவர் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அருளட்டும் என்று வேண்டிக் கொண்டதாக அண்ணாமலை தெரிவித்தார்.

Loading