ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு. 

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு.  கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் , உரிமைத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)ல் ஒப்பந்த அடிப்படையில் மைய நிர்வாகி, முதுநிலை ஆலோசகர், வழக்கு பணியாளர், தகவல் தொழில் நுட்ப பணியாளர், பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  

இதற்கான விண்ணப்பங்கள் கோயம்புத்தூர் மாவட்ட இணையதள முகவரி https://coimbatorenic.in யில் உரிய படிவம் மற்றும் பணியிடம் மற்றும் தகுதிகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நகஅலுவலகம், மாவட்டஆட்சியரகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோயம்புத்தூர்- 641018. தொலைபேசிஎண்- 0422 2305126 என்ற முகவரிக்கு  30.10.2023 அன்று மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading