கோவை உக்கடம் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற கராத்தே பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசானாக, சிகான் ஜெமிஷா மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார். இது வரைக்கும், 400க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று 100க்கும் மேற்பட்டோர் ப்ளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது பயின்று வருகின்ற 7 மாணவர்களான ராபினா, மூக்தார், ரயான், பர்ஹான், நியாஸ், பர்ஹான் ஆகியோர், கடந்த வாரம், சென்னை கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் விளையாட்டு பிரிவு சார்பாக நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு, குமித்தே பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த போட்டியில் கட்டா, குமுத்தே, வெப்பன் கட்டா, டொன் போ கட்டா ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கோவை உக்கடம் பகுதியில் கராக்தே பயிற்சியாளர் சிகான் ஜெமிஷா தலைமையில் சிறப்பு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
Leave a Reply