தூய்மை இந்தியாவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

நமது நகரை நாம் தூய்மையாக வைப்போம் எனும் அடிப்படையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குப்பைகளை பெருக்குவது, பிளாஸ்டிக் இல்லா சூழல் உருவாக்குவது, இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகளை கல்லூரி மாணவ, மாணவியர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவை பி.பி.ஜி.செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சார்பாக தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

பி.பி.ஜி கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி தட்சிணா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர கிழக்கு போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சரவணன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். இதில் பி.பி.ஜி.செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், எரிபொருள் சிக்கனம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இப்பேரணி கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பாக துவங்கி வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகள் தூய்மை இந்தியாவை ஆதரிப்போம்,செழுமையுடன் வாழ்வோம் உள்ளிட்ட முழக்கங்களோடு ஊர்வலமாக சென்றனர். இதில் கல்லூரி முதல்வர் சித்ரா,துணை முதல்வர் கலைவாணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Loading