மாற்று திறனாளி கலைஞர்களுக்கான மேடை மற்றும் மாற்று திறனாளிகளின் படைப்பான “யாவும் வெல்வாள்” எனும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இந்த இசை தட்டை வெளியிட்டார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெங்களூரை சேர்ந்த ஐபிஏடி அறக்கட்டளையின் நிறுவனர் லக்ஷ்மி ரவிசங்கர், செய்து இருந்தார், இந்த நிகழ்வில் மேக்ஸ்வெல் அறக்கட்டளையின் நிறுவனர் முருகன், அருணா, யாவும் வெல்வாள் இயக்குனர் சபரிஷ் சச்சிதானந்தம், பிண்ணனி பாடகி இவாஞ்சலின் மேரி, பிண்ணனி இசை ரூடாலாப் காட்சன், பிண்ணனி பாடகர் ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக விழாவில் பேசிய நடிகர் பாக்கியராஜ் மாற்று பார்வையற்ற மாற்று திறனாளிகளாக இருந்து இந்த யாவும் வெல்வாள் பாடலை உருவாக்கியவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். குறை என்பது அனைவரிடமும் உள்ளது என்னிடமும் உள்ளது குறை இல்லாதவன் கடவுள் மட்டுமே என்றார். எதனையும் குறை என்று பாராமல் நம்மிடம் இருப்பதை சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமென்றார். மேலும் இதில் இசையமைத்து பாடல் பாடிய பெண்களை வெகுவாக பாராட்டினார்.
Leave a Reply