கோவை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வேட்பாளர் அண்ணாமலையை கொங்கு பாரம்பரிய வள்ளிகும்மி நடனமாடி பெண்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து வரவேற்பளித்த பெண்களுடன் இணைந்து பாடலுக்கேற்றவாறு தானும் வள்ளிகும்மி நடனமாடி வேட்பாளர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய வேட்பாளர் அண்ணாமலை வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது , சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி என தெரிவித்தவர், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024 ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மிக்கு என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும்.
பாரம்பரியமான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும், கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார். இதில் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உருப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
Leave a Reply