ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை கடைபிடிக்கபடுகிறது. குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை கொடுக்கும் தாய்பாலை ஒவ்வொரு தாய்மார்களும் தவறாது கொடுக்க வேண்டுமென்பதை வலியிறுத்தியே இந்த தாய்பால் வார விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோவை பந்தய சாலையில் உள்ள டவர் பகுதியில் இருந்து மாசாணிக் மருத்துவமனை வரை செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள் மருத்துவர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கோவை மாநகர காவல்துறை, இன்னர் வீல் கிளப் கோயம்புத்தூர் மற்றும் மாசானிக் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பேரணியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாய்மார்கள் பாலூட்டும் முக்கியவத்தை உணரக்கூடிய வகையில் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பேரணி நடத்தபட்டுள்ளதாகவும், குழந்தையின் உடலில் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கு தாய்பால் மிகவும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய இன்னர் வீல் கிளப் கோயம்புத்தூர் தலைவர் புவனா தாய்பால் ஊட்டுவதின் முக்கியத்தை எடுத்து சொல்லக் கூடிய விழிப்புணர்வு பேரணி மட்டுமல்லாது தாய்பால் கொடுப்பதன் அவசியம் வலியுறுத்தும் வகையில் 7 நாட்களும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும், தாய்ப்பால் தேவை உள்ள குழந்தைகளுக்கு நன்கொடை வழங்கக்கூடிய தாய்மார்கள் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த பேரணி அமைந்ததாக தெரிவித்தவர், தாய்பால் தானம் தருவோர்களுக்கு தாய்ப்பால் கெட்டு விடாமல் பாதுகாப்பதற்கு குளிர்சாதன வசதிகளை மருத்துவமனை வழங்குகின்றனர். கோவை மாநகரின் பல பகுதிகளில் தாய்மார்கள் பாலூட்டுவதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் காவல்துறையில் உள்ள தாய்மார்கள், பெண் காவலர்கள் தாய்ப்பாலை நன்கொடையாக வழங்குவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.
Leave a Reply