ஆடல், பாடல் என குழந்தைகளை மகிழ்வித்த கோவை வெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியின் கிட்ஸ் கார்னிவல் நிகழ்ச்சி.

வார இறுதி நாளை முன்னிட்டு சிறுவர் சிறுமியரை மகிழ்விக்கும் வகையிலும் வாசிப்பு திறமையை அவர்களுக்குள் ஊக்குவிக்கும் விதத்திலும் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள வெஸ்டன் காட்ஸ் தனியார் பள்ளி சார்பில் கிட்ஸ் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் சரண்யா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பல்வேறு திறன் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

மேலும் சிறுவர் சிறுமியர் இடையே வாசிப்பு தன்மையை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கான அறிவு சார் புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள், படத்துடன் ஆன கதை புத்தகங்கள் என ஏராளமான புத்தகங்கள் இடம் பெற்ற புத்தகக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரபல சின்னத்திரை புகழ் இளம் பாடகியான ரிஹானாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாடகி ரிஹானாவின் பாடல்களை ரசித்த, சிறுவர் சிறுமியர் ஒவ்வொருவரும் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சி தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும் நிறைய புத்தகங்களை பார்த்து அதில் சில புத்தகங்களை வாங்கியதாகவும் கூறிய சிறுவர் சிறுமியர்,இசை நிகழ்ச்சியில் ஆடி பாடி கொண்டாடியதாகவும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Loading