ரயில்வே பணிமனையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேவாலயங்களிலும் நாள்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவ கல்வி நிலையங்களிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் இயேசு கிறிஸ்து பிறந்த வரலாறு அவரது வாழ்க்கை குறித்தான நாடகங்களும் பல்வேறு இடங்களில் அரங்கேற்றப்படுகிறது. இதேபோல்  கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு பணிகளும்  கோவையில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை ரயில்வே பணிமனையில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதனடிப்படையில் இந்த ஆண்டும் பணிமனை ஊழியர்கள் வெகு விமர்சையாகவும் உற்சாகமாகவும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். இந்நிகழ்வில் பணிமனை ஊழியர்கள் சாண்டா கிளாஸ் வேடமணிந்தும் சாண்டா கிளாஸ் குல்லா அணிந்தும் கேக் வெட்டி இனிப்புகளை வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். மேலும் ஆடி பாடி அனைவரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Loading