தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சுற்று பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 13ம் தேதி கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர், இந்தியா கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி ஆகியோருக்கு வாக்குசேகரிக்க உள்ளார்.
அதற்காக கோவை எல்.அன்.டி பைபாஸ் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. அந்த இடத்தினை தமிழக வீட்டுவசதி வாரியம் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கழக சொத்துப்பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாணவர் அணி மாநில தலைவர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், தளபதி தியாகு, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, பட்டணம் செல்வகுமார், மதுரை பாலா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Leave a Reply