நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி நடைபெறுகிறது. இன்னிலையில் அனைத்து கட்சி வேட்பாளரும் வேட்பு மனு தாக்கல் செய்வது அவரவர் தொகுதிகுட்பட்ட பகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள், தொழிற்துறையினர் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்த நிலையை கோவை பாராளுமன்ற மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் குண்டமிறங்கி சாமி தரிசனம் செய்தார்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி குண்டம் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை பாராளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளார் சிங்கை ராமச்சந்திரன் அதிகாலையில் கலந்து கொண்டு குண்டம் இறங்கி சாமி தரிசனம் செய்தார். மேலும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். உடன் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply