பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் சுற்றுலாவை துவங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், வேலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா தின தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குழந்தைகள் பாதுகாப்புத்துறை மூலம் அமுல்படுத்தப்பட்டும் பள்ளிகள் விடுதிகள் ஆதிதிராவிடர் பழங்குடியின பள்ளி மாணவர்களை இச்சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த சுற்றுலாவை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அறிவியல் மையம்,மாநில மற்றும் மத்திய அரசு அருங்காட்சியகங்கள் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் அரியூர் தங்க்கோயில் ஸ்ரீபுரம் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்று சுற்றி காண்பிக்கப்படுகிறது. 

இதில் மூன்றுவேளை உணவுகளும் அடிப்படை வசதிகளும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு செய்து தரப்பட்டு சுற்றுலா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading