சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் சப் இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா..

கோவை, துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் சிஆர்பிஎஃப் பயிற்சி கல்லூரியில் 94 வது பிரிவில் நேரடியாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் 95வது பிரிவில் 263 சப் இன்ஸ்பெக்டர் பயிற்சி பெற்று வந்தனர். இன்னிலையில் பயிற்சி நிறைவு பெற்று அவர்கள் நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதற்கான பயிற்சி நிறைவு விழாவில் பயிற்சி கல்லூரியின் ஏடிஜிபி தீபக்குமார் வீரர்களின் அணிவகுப்பு அணிவகுப்பை பார்வையிட்டார்.

மேலும் 263 பேருக்கு ஆபீஸ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ரேங்கிங் அடிப்படையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார். வீரர்களுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சி ஆசிரியர்கள் மூலம் ஒழுக்கம் அறிவு, திறமை மற்றும் அணுகுமுறை போன்ற மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடத்திட்டங்கள் ஆகியவற்றை எப்படி கையாள்வது என்ன விதமான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் குண்டு வீச்சு,, அணுகதிர் வீச்சு வேதியியல் விளைவுகள் மற்றும் இயற்கை செயற்கை அழிவுகளில் கதிர்வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை முறையாக பெற்றுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கமாண்டோ வீரர்களின் துப்பாக்கி சூடுதல், இரு சக்கர வாகன வீரர்களின் சாகசம், ஓடு உடைத்தல், சிஆர்பிஎப் உடற்பயிற்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பேண்ட் வாத்தியம் வித் அவுட் கமென்ட் சாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Loading