குறைந்த அளவு வாக்குப்பதிவான வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கோவையில் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் போது குறைந்த அளவு வாக்குப்பதிவான கவுண்டம்பாளையத்தில் உள்ள லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அங்கப்பா மெட்ரிக்  சிபிஎஸ்இ, ஆகிய வாக்குப்பதிவு மையங்களை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர்/ தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவு அதிகரித்திடவும் அப்பகுதி பொதுமக்களிடம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.

Loading