கலைஞர் சிறப்பு புகைப்பட கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுங்கள் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி.

வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் கலைஞர் சிறப்பு புகைப்படக் கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவர்கள் பார்வையிடுமாறு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த புகைப்பட கண்காட்சியில் பன்முக கலைஞரின் பல்வேறு பரிணாமம் தமிழ் அறிஞர்களுடன் கலைஞர் அரசியல் ஆளுமைகளுடன் கலைஞர் பிரதமர்களுடன் கலைஞர் குடியரசு தலைவர்களுடன் கலைஞர் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலைஞரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் 

அவரின் இளம் வயது முதல் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், ஆட்சி பொறுப்பேற்ற போது பேரறிஞர் அண்ணா பெரியார் மற்றும் முன்னாள் பிரதமர்கள் தேசிய தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரைகள் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால் இன்றைய தலைமுறையினர்களான பள்ளி கல்லூரி சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிட்டு கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading