பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்து, குடும்ப வாக்காளர்களுக்கான வாக்காளர் கையேட்டினை வழங்கினார். 2024 பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம், அம்மன்குளம் சாலை பகுதியில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி அவர்கள் தொடங்கி வைத்து, குடும்ப வாக்காளர்களுக்கான வாக்காளர் கையேட்டினை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட பல்வேறு பணிகள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பிரித்து அனுப்பி வைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 3077 வாக்குசாவடிகளை சேர்ந்த 31,14,118 வாக்காளர்களுக்கு பூத் சிலிப்’ எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டுகள் (Voters Information Slip) வாக்குப்பதிவு அலுவலர்கள் மூலம் வழங்கும் பணியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இத்துடன், 8,68,893 குடும்பத்திற்கு தலா ஒரு வாக்காளர் கையேடும் வழங்கப்படுகின்றது. இவ்வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள பகுதி மற்றும் வரிசை எண் உள்ளிட்ட வாக்காளர்களின் அடிப்படை விவரங்கள் இருக்கும். மேலும், வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வழங்கியபின் அதற்கான ஒப்புதல் பெறப்படும்.எனவே வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் தகவல் சீட்டுகளை பெற்றுக்கொண்டு தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தவறாமல் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி கேட்டுக்கொண்டார்.
Leave a Reply