மருதமலை கோவில் வழிபாதை சீரமைப்பு பணி காரணமாக வரும் ஒரு மாத காலத்திற்கு பக்தர்களுக்கு படி வழியாக மட்டுமே அனுமதி.

கடவுள் முருகனின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றான மருதமலை கோயில் மலை வழிப்பாதை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் வரும் ஒன்பதாம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு படி வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்தான செய்தி குறிப்பில், கோயிலின் அடிவாரம் முதல் திருக்கோயில் மலைக்கோயில் செல்லும் மலைவழிப்பாதை சுமார் 2500 மீட்டர் கொண்டது.

இந்த மலைப்பாதையினை சீரமைக்கும் பணி நடைபெற இருப்பதால் 09.10.2023 முதல் ஒரு மாத காலத்திற்கு திருக்கோயில் பேருந்து உட்பட கார், இரண்டு சக்கர வாகனம் என எவ்விதமான போக்குவரத்தும் இல்லை எனவும் கோயிலுக்கு வருகைபுரியும் பக்தர்கள் படிவழிப்பாதையில் மட்டுமே பயன்படுத்தி தரிசனம் செய்யலாம் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading