ஈட் ரைட் மில்லட் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி இணைந்து ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சிறுதானியங்களின் ஊட்டச்சத்து முக்கியம் என்பதனை வலியுறுத்தி மில்லட் பைக்கத்தான் என்ற இருசக்கர வாகன பேரணி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் காந்தி குமார் பாடி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி தமிழ்ச்செல்வன், ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தலைவர் தங்கவேலு மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த இருசக்கர பேரணி உக்கடம் வழியாக ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நிறைவடைந்தது. இதனையடுத்து ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியில் ஈட் ரைட் மில்லட் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2000 மாணவர்கள் பங்கேற்று குறைந்த நேரத்தில் அதிக ஆசனங்களை செய்து உலக சாதனை படைத்தனர். 

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, பணிவரகு, குதிரைவாலி, வரகு, சாமை சிறுதானிய பொருட்களை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் சிறு தானியங்களில் புரதம், இரும்பு, வைட்டமின் பி, நார்சத்து, கால்சியம் பைட்டோகெமிக்கல்ஸ் சத்துகள் நிறைந்துள்ளது என்றனர். மேலும் அனைவரும் துரித உணவு பொருட்களை விடுத்து உடலுக்கு அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் சிறுதானிய உணவு பொருட்களை தினசரி உணவில் தேர்த்துகொள்ள வேணடுமெனவும் கேட்டுகொண்டனர்.

Loading