கோவையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெயபால், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இது வரை 6 கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.நிலைகட்டணம் மற்றும் பீக்ஹவர் கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். அதுமட்டுமில்லாமல் 3B-யில் இருந்து 3A-க்கு மாற்றிய அரசாணையை அமல்படுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்து வருவதாக தமிழக அரசின் மீது குற்றம் சாட்டினர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.எங்களின் தொழில் 40 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எங்களின் வலியை அரசு புரிந்து கொண்டு செவி சாய்க்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக 7-ம் கட்ட கவன ஈர்ப்பு போராட்டமாக வரும் 6-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக இதை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தனர். கோவையை பொறுத்தவரை 10 சட்டமன்ற உறுப்பினர்,2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கோ இண்டியா வளாகத்திற்கு வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கின்றோம்.
இதில் நடவடிக்கை இல்லை என்றால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அன்றே முடிவு செய்யப்படும் எனவும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் பேசிய போது, தொழில்துறை நிறுவனங்களால் மின்சார வாரியத்துக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அரசாங்கம் சரியாக மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்தாத காரணத்தினால் மட்டுமே பாதிப்பு ஏற்படுவதாக குற்றம் சாட்டினார். 1 லட்சத்து 92 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக மின்சார வாரியம் நஷ்டமானதுக்கு முழு காரணம் அங்கு பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் தான் நஷ்டம் ஆகி உள்ளது. இனி வரும் காலங்களில் படித்த புத்திசாலியான அதிகாரிகளை பணி அமர்த்தினால் மட்டுமே மின்சார வாரியம் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று வலியுறுத்தினார்.
Leave a Reply