தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் போட்டியிட்ட கோவையை சேர்ந்த இன்ஜினியர் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தமிழக தலைவராக இன்ஜினியர் சந்திரசேகர் பதவி வைத்து வந்தார். இவர் மீண்டும் இரண்டாவது முறையாக பாரா ஒலிம்பிக் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இரண்டாவது முறையாக தலைவராக பதவி ஏற்ற இன்ஜினியர் சந்திரசேகர்க்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுந்தர், சந்திரசேகர் மகாதேவி உள்ளிட்டவர்களும், பாரா ஒலிம்பிக் சங்க நிர்வாக சங்கத்தின் நிர்வாகிகள், பாரா ஒலிம்பிக் வீரர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்ஜினியர் சந்திரசேகர் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களை தயார் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்திருந்ததும், கடந்த ஜூலை மாதம் பாரிசில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிகளுக்கு வீரர்களுடன் சென்று ஊக்கப்படுத்தினார். மேலும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி மண்டல அளவில் பயிற்சி வழங்கி அவர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார் செய்துள்ளதுடன், கோவையில் பாராளு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply