திமுகவிலிருந்து விலகி அதிமுகாவில் இணைந்த முன்னாள் பேரூராட்சி தலைவர்.

கோவை ஒத்தகால்மண்டபம் திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்ரமணி தலைமையில் 50 க்கும் மேற்பட்டவர்கள் திமுகவிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.கோவை கிணத்துக்கடவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் மகள் கிருத்திகா மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த செந்தூர் தர்ஷன் ஆகியோரது திருமண வரவேற்பு விழா கோவை ஈச்சனாரி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்பி வேலுமணி மணமக்களை வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி வ ஜெயராமன், மற்றும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ தாமோதரன் உட்பட, கழக தொண்டர்களும், உற்றார் உறவினர்களும்  ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

மேலும் இந்த விழாவில் ஒத்தக்கால் மண்டபம் திமுக முன்னாள் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணி உட்பட திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ் பி வேலுமணி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Loading