கோவை விமான நிலையம் வந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஹென்றிக்கு தேசிய துணை தலைவர் செந்தில் குமார் தலைமையி்ல் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவ்வமைப்பின் தேசிய தலைவர் ஹென்றி, அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பட்டா மனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் ஹாக்கா பகுதிகளில் அமைந்துள்ள பட்டா மனைகளையும் வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்ய அரசு முன் வரவேண்டும் என கோரிக்கை விடுத்தார். பதிவு துறை அலுவலகங்களில்,பொதுமக்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லை என கூறிய அவர், பதிவு துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அலை கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். பொது அதிகார ஆவணத்திற்கான கட்டணத்தை ரத்து செய்ய வேண்டி கோரிக்கை விடுத்த அவர், அதே போல கடந்த பதிவு துறை மூலம் அறிவித்த கட்டாயம் மனை மற்றும் கட்டிடத்துடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவு, பதிவு கட்டணம் எவ்வளவு இருந்தாலும் பொதுமக்கள் கட்டுவார்கள் என்ற தவறான பார்வையை பதிவு துறை கொண்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.
அரசின் பல்வேறு நிதி சுமைகளுக்கு பதிவு துறையை அரசு பயன்படுத்துவதாக கூறிய அவர்,பதிவு துறையில் எல்லா இடங்களிலும் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். இந்த உயர்வு பகுதிக்கு பகுதி முரண்டபாடாக இருப்பதாக கூறிய அவர், இதற்கு தீர்வு காண அரசு முத்தரப்பு குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். இதில் ரியல் எஸ்டேட் துறையினர், அரசு அலுவலர்கள்,மற்றும் அந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply